மருத்துவமனை முழுவதும் கொட்டி கிடக்கும் ரத்தம்.. மருத்துவர்கள், நர்ஸ்கள் மீது கொலைவெறி தாக்குதல்: வெளியான வீடியோ
இந்தியா தலைநகர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி sarita vihar-ல் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழக்க, ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் கண்ணில்பட்ட மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் பல ஊழியர்கள் காயமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trigger warning- Blood spilled all over in this corridor inside Delhi's Apollo hospital. Many staffers have received injuries.
— Saahil Murli Menghani (@saahilmenghani) April 27, 2021
LINK- https://t.co/grzkJYK5hT pic.twitter.com/D8XwZuqkpT
சம்பவத்தை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனைக்குள் உள்ள நடைபாதை முழுவதும் ரத்தம் கொட்டி கிடக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன், உயிரிழந்நத மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.