சுவிட்சர்லாந்தில் வாழும் அபூர்வ இரண்டுதலை ஆமை குறித்து வெளியாகியுள்ள தகவல்
சுவிட்சர்லாந்தில் வாழும் அபூர்வ இரண்டுதலை ஆமை தன் 25 ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்த ஆமை, உலகிலேயே அதிக வயது வாழும் இரண்டு தலை ஆமை என கருதப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் வாழும் அபூர்வ இரண்டுதலை ஆமை தன் 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
ஜெனீவாவிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாழும் Janus என்னும் அந்த இரண்டு தலை ஆமை, வனத்தில் வளராமல், காப்பகத்தில் வளர்க்கப்படும் நிலையில், அது 25 வயதை எட்டியுள்ள விடயம் அசாதாரண விடயமாக பார்க்கப்படுகிறது.
Janus, உலகிலேயே அதிக வயது வாழும் இரண்டு தலை ஆமை என கருதப்படுகிறது.
Keystone / Salvatore Di Nolfi
Janusஇன் பிறந்தநாளில் அதற்கு மிகவும் பிடித்த சில மலர்கள் அத்ற்கு உணவாக கொடுக்கப்பட்டன.
Janus ஏன் வனத்தில் விடப்படாமல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றால், அதன் இரண்டு தலைகளையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் அளவுக்கு அதன் உடலில் போதுமான இடம் இல்லை. ஆகவே, அதை ஏதாவது கொன்றுதின்னிகள் தாக்குமானால், அதனால் தப்பிக்க இயலாது. அத்துடன், அது கவிழ்ந்து விழுந்துவிட்டால் அதனால் திரும்ப நிமிர்வதும் கடினம் ஆகும்.
Janus ஆமைக்கு இரண்டு தலைகள் மட்டுமல்ல, இரண்டு இதயங்கள், இரண்டு ஜோடி நுரையீரல்கள் மற்றும் இரண்டு வயிறுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.