ஜியோ ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா: புதிய சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களுடைய ஒன்பதாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜியோவின் 9வது ஆண்டு விழா
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 5ம் திகதி தங்களுடைய 9வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.
இதன் ஒரு பகுதியாக, ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
புதிய சிறப்பு சலுகைகள் என்னென்ன?
புதிய சலுகைகளின் கீழ் ரூ.349, ரூ.899 மற்றும் ரூ.999 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கின்றன.
மேலும் இவற்றின் கீழ் ரூ.299 மதிப்புள்ள ஜியோ ஹாட்ஸ்டார் 90 நாட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல் பொருட்களுக்கு ரூ.399 தள்ளுபடியும், Ajio தளத்தில் ரூ.1000க்கு மேல் ஷாப்பிங் செய்யும் போது ரூ 200 தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பொழுதுபோக்கு சந்தாக்கள், பயணம் மற்றும் டேட்டா சேவைகளிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகளை பெறுவது எப்படி?
மேல் குறிப்பிட்டுள்ள ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் செய்யப்படும் மொபைல் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகைகளை பெற முடியும்
ரூ.349 திட்டம்: இதில் 28 நாட்கள், 2GB டேட்டா பயன்களுடன் தினமும் 100sms மற்றும் வரம்பற்ற அழைப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
ரூ.899 திட்டம்: இதில் 90 நாட்கள், 2GB டேட்டா பயன்களுடன் தினமும் 100 sms, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 20GB கூடுதல் டேட்டா வசதிகள் அனுமதிக்கப்படுகின்றன.
ரூ.999 திட்டம்: இதில் 98 நாட்கள், 2GB டேட்டா பயன்களுடன் தினமும் 100sms, மற்றும் வரம்பற்ற அழைப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |