தினசரி டேட்டா தீர்ந்துவிட்டதா…கவலை வேண்டாம்! குறைந்த விலையில் ஜியோவின் சூப்பர் பேக் பிளான்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ அசத்தலான இரண்டு டேட்டா பிளான்களை வெளியிட்டுள்ளது.
ஜியோவின் அசத்தல் அறிவிப்பு
ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இது நாள் வரை பயனர்களை அதன் அதிரடி ஆஃபர்கள் மூலம் கவர்ந்து வருகிறது.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்தியாவின் டெலிகாம் சேவையில் மிகப்பெரிய புரட்சியே ஜியோ நிறுவனம் தான் நிகழ்த்தியது என்றால் அது மிகையாகாது.
ஜியோ நிறுவனம் பழைய வாடிக்கையாளர்களை எவ்வாறு தங்களுடைய சேவையின் மூலம் தக்க வைத்து வருகிறதோ, அதே போல புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது, மேலும் அதற்காக தொடர்ச்சியாக வித்தியாசமான பல பிளான்களையும் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிளான்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் தினசரி இன்டர்நெட் டேட்டா நிறைவடைந்தாலும், அதன் வேகம் குறையாமல் இனி இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
புதிய பிளான்கள்
ஜியோ நிறுவனம் 15 ரூபாய்க்கு 1GB இன்டர்நெட் மற்றும் 25 ரூபாய்க்கு 2GB டேட்டா என்ற இரண்டு டேட்டா பிளான்களை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், தற்போது ரூ.19 மற்றும் ரூ.29 ஆகிய விலையில் இரண்டு புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோவின் இந்த புதிய பூஸ்டர் பிளான்களை பயன்படுத்தினால் ரூ.19க்கு 1.5GB டேட்டா மற்றும் ரூ. 29க்கு 2.5GB டேட்டா கூடுதலாக சேர்க்கப்படும். அதாவது கூடுதலான 4 ரூபாய்க்கு 500mb டேட்டா கூடுதலாக சேர்க்கப்படும்.
இந்த பிளான்களை ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வரும் நிலையில் ஜியோவின் இந்த பிளானில் உள்ள வித்தியாசம் என்வென்றால் ஏர்டெல் பேக் ஒரு நாளில் காலாவதி ஆகிவிடும், ஆனால் ஜியோவின் இந்த பேக் நாள் முடிவில் காலாவதியாகாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |