விலையை உயர்த்திய Jio., ஜூலை 3 முதல் அமுல்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Jio) தனது Prepaid மற்றும் Postpaid திட்டங்களின் விலையை 15% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது.
புதிய கட்டணத் திட்டங்கள் ஜூலை 3-ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
புதிய விலையின்படி, இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ரூ.239 திட்டம் ரூ.299 ஆகிவிட்டது.
ரூ.239 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள்.
அதேபோல், மலிவான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155க்கு இருந்தது. இப்போது அது ரூ.189க்கு கிடைக்கும்.
கட்டண உயர்வுக்கு பின் உள்ள திட்டங்கள்:
- 28 நாட்கள் – ரூ.189 – 2ஜிபி/மாதம்
- 28 நாட்கள் – ரூ.249 – 1ஜிபி/நாள்
- 28 நாட்கள் – ரூ.299 – 1.5 ஜிபி/நாள்
- 28 நாட்கள் – ரூ.349 – 2 ஜிபி/நாள்
- 28 நாட்கள் – ரூ.399 -2.5ஜிபி/நாள்
- 28 நாட்கள் – ரூ.449 – 3 ஜிபி/நாள்
- 56 நாட்கள் – ரூ.579 – 1.5 ஜிபி/நாள்
- 56 நாட்கள் – ரூ.629 – 2 ஜிபி/நாள்
- 84 நாட்கள் – ரூ.479 – 6 ஜிபி
- 84 நாட்கள் – ரூ.799 – 1.5 ஜிபி/நாள்
- 84 நாட்கள் – ரூ.859 – 2 ஜிபி/நாள்
- 84 நாட்கள் – ரூ.1199 -3ஜிபி/நாள்
- 336 நாட்கள் – ரூ.1899- 24 ஜிபி
- 365 நாட்கள் – ரூ.3599 – 2.5 ஜிபி/நாள்
ரூ.15 இன் Data Add-On இப்போது ரூ.19
மாதாந்திர மற்றும் லான்ச் டேர்ம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரிப்பதுடன், Data Add-Onகளின் விலைகளையும் நிறுவனம் அதிகரித்துள்ளது.
அதாவது டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு கூடுதல் டேட்டா எடுக்கும் திட்டங்களின் விலைகளையும் நிறுவனம் அதிகரித்துள்ளது.
1ஜிபி Data Add-On-ன் விலை ரூ.15 ஆக இருந்தது, இப்போது அதற்கு ரூ.19 செலுத்த வேண்டும்.
புதிய Data Add-On திட்டங்கள்
- ரூ.19 – 1 ஜிபி
- ரூ.29 – 2 ஜிபி
- ரூ.69 – 6 ஜிபி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reliance Jio mobile tariff hike rom july 3, Reliance Jio new plans and prices