ரஷ்ய எண்ணெய்... முக்கிய அறிக்கையை வெளியிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் புதிய இணக்கத் தேவைகள் உட்பட தாக்கங்களை மதிப்பிட்டு வருவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைப்பிடிக்கும்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சமீபத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து ஏதேனும் வழிகாட்டுதல் கிடைக்கும்போதெல்லாம், நிறுவனம் அதைக் கடைப்பிடிக்கும் என்று ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் ஐரோப்பாவிற்கு சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அறிவித்த சமீபத்திய கட்டுப்பாடுகளை நாங்கள் கவனித்தோம்.
புதிய இணக்கத் தேவைகள் உட்பட, தாக்கங்களை ரிலையன்ஸ் தற்போது மதிப்பிட்டு வருகிறது. ஐரோப்பாவிற்குள் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆதாரமாக
மேலும், பொருந்தக்கூடிய தடைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கு இணங்குவதற்கான அதன் நீண்டகால மற்றும் குறைபாடற்ற பதிவைப் பராமரிக்க நிறுவனம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது மற்றும் இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மாற்றியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய இரண்டு எண்ணெய் நிறுவனங்களான Rosneft and Lukoil மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. ரஷ்யா முன்னெடுக்கும் போருக்கு இந்த நிறுவனங்களே நிதி ஆதாரமாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், எண்ணெய் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை உண்மையில் தீவிரமானது என்றும், ரஷ்ய பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் வலுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |