முதல் செயற்கைக்கோள் இணையம்., கால்தடம் பதிக்க துடிக்கும் Relinace Jio
செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கும் இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை Relinace Jio அடைய முயற்சிக்கிறது.
இதற்காக ஜிகாபிட் ஃபைபர் இன்டர்நெட் வழங்க அந்நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ இயங்குதளம் லக்சம்பேர்க்கை தளமாகக் கொண்ட ஐரோப்பாவின் SES நிறுவனத்துடன் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த கூட்டு முயற்சிக்கு Orbit Connect India என்று பெயரிடப்பட்டுள்ளது.
கூட்டு முயற்சிக்கு இந்திய வான்வெளியில் செயற்கைக்கோள்களை இயக்க இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) அனுமதி அளித்துள்ளதாக Reuters அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, Orbit Connect India-க்கு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று வகையான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன, ஆனால் செயல்பாடுகளைத் தொடங்க நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் கூடுதல் ஒப்புதல் தேவைப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்கு Amazon போன்ற நிறுவனங்கள் போட்டியிடும் நேரத்தில் ஆர்பிட் கனெக்ட் இந்தியா செயற்கைக்கோள் இணைய சேவைக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின்படி, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட Inmarsat என்ற மற்றொரு நிறுவனமானது அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்குவதற்காக இந்தியாவில் செயற்கைக்கோளை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளதாக IN-SPACe தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.
அதே நேரத்தில், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் கைபர் நிறுவனங்களும் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reliance Jio Satellite Internet, Mukesh Ambani Reliance