கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலிக்கு நிவாரணம் வேண்டுமா? இதோ சூப்பர் இயற்கை வைத்தியம்
இன்று பலரும் கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலியால் பெரும் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு. இவை பல காரணங்களால் ஏற்படுகின்றது.
இதற்காக அடிக்கடி வைத்தியசாலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் நீக்க முடியும். தற்போது இதற்கான சூப்பர் இயற்கை வைத்தியம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்
- கடுகு - தேவையான அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு கடுகு மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அதை மிதமாக சூடுபடுத்திக்கொள்ளவும். இப்போது இதனை வலி உள்ள இடங்களில் தடவி விட்டால் கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலி முற்றிலுமாக நீங்கும்.
மேலும் அடிபட்டு ரத்தம் கட்டுதல் போன்ற பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும்.
கடுகு
பெருங்காயம்