பொருளாதார தடைகளை நீக்கினால்...உணவு ஏற்றுமதிக்கு துறைமுகங்கள் திறக்கப்படும்: ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் துறைமுகங்களை திறக்க வேண்டும் என்றால் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அகற்றவேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலகின் உணவு தானிய உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றான உக்ரைனின் முக்கிய துறைமுகங்களை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
இதன்முலம் உலக அளவில் பெரும் உணவு தானிய தட்டுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, உக்ரைனின் துறைமுகங்களை திறக்ககோரி ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவிடம் கோரிக்கை முன்வைத்தது.
இதுத் தொடர்பாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்த கருத்தில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இதயம் இருந்தால் உக்ரைனின் துறைமுகங்களை திறக்குமாறு கேட்டுகொள்கிறேன், அவ்வாறு செய்வதன் முலம் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து மிகப் பெரிய பஞ்சத்தைத் தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போரிஸ் ஜான்சன் மீது இனி அபராதங்கள் விதிக்கபடாது: பிரித்தானிய காவல்துறை அறிவிப்பு!
இந்தநிலையில், உக்ரைன் துறைமுகங்களை திறக்க வேண்டும் என்றால் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அகற்றவேண்டும் என ரஷ்யா தெரிவித்து இருப்பதாக Interfax அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.