இது முடிவல்ல ஆரம்பம்தான்... கொரோனா குறித்து அமெரிக்க நிபுணர் கூறும் கவலையளிக்கும் செய்திகள்
கொரோனா முடிவடைய போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம், ஆனால், அது இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்கிறார் புகழ் பெற்ற அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் ஒருவர்.
பெரியம்மை என்னும் நோயை ஒழித்த உலக சுகாதார அமைப்பின் அணியில் பணியாற்றியவரான Dr Larry Brilliant, உலகில் 15 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாம் இன்னமும் கொரோனாவின் தொடக்கத்திற்கு அருகில்தான் நாம் இருக்கிறோம், முடிவுக்கு அருகில் அல்ல என்கிறார்.
தான் பார்த்ததிலேயே டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் பயங்கரமானது என்று கூறியுள்ள Dr Larry, அது குறைவான நேரத்தில் பெருகி, ஒருவரிடமிருந்து குறைந்தது எட்டு பேருக்கு பரவுவதால் அதிக அபாயகரமானது என்கிறார்.
வேகமாக பரவும் இந்த வைரஸ், தடுப்பூசி பெற்றவர்களைக் கூட தொற்றுவதைப் பார்த்தால், தொற்றுவதற்காக அது வேகமாக அடுத்த நபரை தேடி ஓடுவது போல் இருக்கிறது என்கிறார் அவர்.
அத்துடன், 200க்கு அதிகமான நாடுகளிலுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கினாலன்றி, புதிது புதிதாக திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும் என எச்சரிக்கிறார் Dr Larry.