இன்று முதல்... இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இங்கிலாந்தில், ’வாடகைக்குக் குடியிருப்போருக்கான உரிமைகள் சட்டம்’ என்னும் சட்டம் இன்று, அதாவது, 2026ஆம் ஆண்டு, மே மாதம் 1ஆம் திகதி முழுமையாக அமுலுக்கு வருகிறது.
No-fault eviction
இங்கிலாந்தில், no-fault eviction என்னும் சட்டப்படியான நடைமுறை ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்துவந்தது.

அதாவது, வீட்டு உரிமையாளர், தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவரை, அவர் வாடகை ஒப்பந்தத்தை மீறாத நிலையிலும்கூட வீட்டை காலி செய்யவைக்க முடியும்.
விடயம் என்னவென்றால், இந்த விதியை வீட்டு உரிமையாளர்கள் பலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவந்துள்ளார்கள்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் லேபர் அரசு பதவிக்கு வந்தபோது, இந்த no-fault eviction முறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தது.
அதைத் தொடர்ந்து, அதாவது, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த 2024 ஜூலை முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், இந்த விதியின் கீழ், 11,000 வாடகை வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்யவைக்கப்பட்டுள்ளார்கள்.
வாடகைக்குக் குடியிருப்போருக்கான உரிமைகள் சட்டம்
இந்நிலையில், லேபர் அரசு அளித்த வாக்குறுதியின்படி, Renters' Rights Act என்னும் ’வாடகைக்குக் குடியிருப்போருக்கான உரிமைகள் சட்டம்’ இன்று முழுமையாக அமுலுக்கு வருகிறது.
ஆக, இனி முன்போல் வீட்டு உரிமையாளர்கள் சரியான காரணம் கூறாமல் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்களை வீட்டை காலி செய்யவைக்கமுடியாது.

அதே நேரத்தில், தாங்கள் வாடகைக்கு வந்த வீடு, வீட்டு உரிமையாளர் கூறியது போல தரமான வீடு இல்லை என்பது தெரியவருமானால், அவர்கள் இரண்டு மாத நோட்டீஸ் கொடுத்து தாங்களே வீட்டை காலி செய்யலாம்.
அதாவது, இந்த சட்டம், வாடகைக்குக் குடியிருப்பவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை தொடர்ந்து மீறும் வீட்டு உரிமையாளர்களுக்கு 40,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
இங்கிலாந்தைப் பொருத்தவரை, 11 மில்லியன் மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |