ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து... தடாலடியாக சரிந்த எண்ணெய் விலை

Crude Oil Prices Today Israel-Iran conflict Strait of Hormuz
By Arbin Apr 08, 2026 04:04 AM GMT
Report

அமெரிக்காவும் ஈரானும் நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளதுடன் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

கப்பல் போக்குவரத்து

இந்த இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முக்கியமாக ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து அனுமதிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து... தடாலடியாக சரிந்த எண்ணெய் விலை | Reopen Hormuz Oil Plunges

போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 13 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய்க்கு 94.80 டொலராகக் குறைந்தது. அதேவேளையில், அமெரிக்கச் சந்தையில் வர்த்தகமாகும் எண்ணெய் 15 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து 95.75 டொலராக இருந்தது.

ஆனால், பிப்ரவரி 28-ஆம் திகதி மோதல் தொடங்குவதற்கு முந்தைய நிலையைவிட விலைகள் தற்போதும் அதிகமாகவே உள்ளன. அப்போது, ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 70 டொலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்த நீரிணையைப் பயன்படுத்த முயலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் மிரட்டியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுப்பு

ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுப்பு

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன. ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 5 சதவீதம் உயர்ந்தது; அதேவேளையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு ஏறக்குறைய 6 சதவீதம் உயர்ந்தது.

ஹொங்ஹொங்கின் ஹேங் செங் குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்தது; அதேவேளையில், அவுஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2.7 சதவீதம் ஏற்றம் கண்டது.

செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ட்ரம்ப் குறிப்பிடுகையில் ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், ஈரான் விதித்துள்ள 10 அம்ச நிபந்தனைகளை மறுப்பேச்சின்றி ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து... தடாலடியாக சரிந்த எண்ணெய் விலை | Reopen Hormuz Oil Plunges

ஈரானுக்கு எதிரான எந்த வகையான தாக்குதலும் நிறுத்தப்படும் என்றால், போர் நிறுத்தத்திற்கு ஈரான் தயார் என்றும், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து சாத்தியம் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

ஈரானை மொத்தமாக அழித்தொழிப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தாலும், போரைத் தீவிரப்படுத்துவதன் மூலம் எரிசக்தி விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர அனுமதிப்பது குறித்து ட்ரம்ப் கடும் நெருக்கடியில் இருந்திருக்கக்கூடும் என்றே சந்தை தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் செல்வாக்கு அமெரிக்க மக்களிடையே வரலாறு காணாத வீழ்ச்சியில் இருக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு என்பது மிக மோசமான எதிர்வினையை ஏற்படுத்தக் கூடும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீடித்த அமைதி ஒப்பந்தம்

போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் இந்த இரண்டு வார காலத்தில், நீரிணைக்கு அருகே சிக்கியுள்ள மேலும் பல எண்ணெய் கப்பல்கள் வெளியேறக்கூடும். இது வரும் வாரங்களில் சந்தைகளுக்கு ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

போரின் நெருக்கடியிலும் இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகள், சமீப வாரங்களில் தங்கள் கப்பல்களுக்கான பாதுகாப்பை பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து, தங்களது கப்பல்கள் பல நீரிணையைக் கடந்துள்ளதாகச் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து... தடாலடியாக சரிந்த எண்ணெய் விலை | Reopen Hormuz Oil Plunges

ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை ஏற்படும் வரை, அங்கு எரிசக்தி உற்பத்தி முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தகவல் கசிந்துள்ளது.

மேலும், போரை தொடங்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் இதுவரை தங்கள் கருத்தை வெளியிடாத வரையில், எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தம் மீறப்பட வாய்ப்பு உள்ளதாகவே கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US