அச்சுறுத்தும் ரஷ்ய கடற்படை... ஐரோப்பிய நாடொன்று பரபரப்பு புகார்
ரஷ்ய கடற்படை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக டென்மார்க்கின் பாதுகாப்பு புலனாய்வு சேவை தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு ரேடார்களால்
இப்படியான சம்பவங்கள் எதிர்பாராத விதமாக அபாயத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு,
கடலுக்கு அடியில் கேபிள்கள் துண்டிக்கப்பட்டது, எரிவாயு குழாய் இணைப்புகள் சேதப்படுத்தப்பட்டது, வான்வெளி அத்துமீறல்கள் மற்றும் ட்ரோன்களால் அச்சுறுத்துவது உள்ளிட்ட சம்பவங்களுக்குப் பிறகு பால்டிக் பகுதி தொடர்ந்து பரபரப்பாகவே காணபப்டுகிறது.
இதன் காரணமாகவே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உரசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டென்மார்க்கின் பாதுகாப்பு புலனாய்வு சேவை வெளியிட்டுள்ள தகவலில்,
டேனிஷ் ஜலசந்திப் பகுதியில் டென்மார்க்கின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் கண்காணிப்பு ரேடார்களால் குறிவைக்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளது என்றும்,
ரஷ்ய போர்கப்பல்களில் இருந்து ஆயுதங்களால் குறிவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், டென்மார்க் பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்ய போர் கப்பல் நங்கூரமிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும்,
டேனிஷ் ஜலசந்தி
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை டென்மார்க் முறியடிக்க முயன்றால், தலையிட அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பான சர்வதேச கப்பல் பாதையான டேனிஷ் ஜலசந்தியில், ரஷ்ய இராணுவக் கப்பல்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. இதனாலையே டென்மார்க் கடற்படை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது.
இந்த நிலையில், டென்மார்க்கிற்கு எதிரான ரஷ்ய கடற்படை அச்சுறுத்தல்கள் தீவிரமான விடயம் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |