மணிப்பூர் ஆர்ப்பாட்டம் முடித்து வீடு திரும்பிய பெண்ணுக்கு ரேபிடோ டிரைவர் செய்த செயல்!
மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் வீடு திரும்பும் போது ரேபிடோ பைக் டிரைவர் செய்த செயல் குறித்து அந்த பெண் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.
மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து ஆர்பாட்டம்
இந்திய மாநிலம் மணிப்பூரில் 2 பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், பெங்களூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலரான பெண் ஒருவர், வீடு திரும்புவதற்காக ரேபிடோ பைக்கை புக் செய்துள்ளார். அப்போது ரேபிடோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் சுய இன்பம் செய்துள்ள செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தகாத முறையில் நடந்து கொண்ட ரேபிடோ டிரைவர்
பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நான் பெங்களூர் டவுன்ஹாலில் மணிப்பூர் வன்முறைப் போராட்டத்திற்குச் சென்று வீடு திரும்புவதற்கு ஆட்டோ, பல கார் ரத்தானதால் அதற்குப் பதிலாக ரேபிடோ பைக்கை புக் செய்தேன்.
Thread ?#SexualHarassement
— Athira Purushothaman (@Aadhi_02) July 21, 2023
Today, I went for the Manipur Violence protest at Town Hall Bangalore and booked a @rapidobikeapp auto for my way back home. However, multiple auto cancellations led me to opt for a bike instead. pic.twitter.com/bQkw4i7NvO
இதில், ஆச்சர்யம் என்னவென்றால், டிரைவர் வேறு பைக்கில் வந்து, பதிவு செய்தவர் என்று கூறினார்.
அப்போது, நான் எனது முன்பதிவை அவரது ஆப் மூலம் உறுதிசெய்து பயணத்தைத் தொடர்ந்தேன். பின், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது டிரைவர் ஒரு கையால் பைக் ஒட்டினார்.
இதையடுத்து, பைக் ஓட்டியபடியே சுய இன்பம் செய்தார். நான் என் பாதுகாப்புக்கு பயந்து பயணம் முழுவதும் அமைதியாக இருந்தேன்.
மேலும், எனது வீட்டின் இருப்பிடத்தை மறைக்க எனது உண்மையான இடத்திலிருந்து 200 மீட்டர் முன்பே என்னை இறக்கிவிடுமாறு அவரிடம் கேட்டேன்.
பயணத்தை முடித்தும், அவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அழைப்புகளை மேற்கொண்டார், மெசேஜ் அனுப்பினார் என தெரிவித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்
மேலும், அந்த பெண்," பின்னணி சரிபார்ப்புக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? உங்கள் பயனர்களின் பாதுகாப்பு முதன்மையானதாக இருக்க வேண்டும் அல்லவா?
உங்கள் சேவையில் பதிவுசெய்தவர்களுக்கு பாதுகாப்பான பயணமாக இருக்கும் என்பதை உறுதிசெய்யவும், தொடர்ந்து வேறு வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வருகிறது என பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |