வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம் காட்டுகிறதா சுவிட்சர்லாந்து?
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடிமக்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம்?
சுவிஸ் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், நாடு முழுவதும், சுவிஸ் குடிமக்கள் பெறும் சராசரி ஊதியம், வெளிநாட்டவர்கள் பெறும் ஊதியத்தைவிட அதிகம் என தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, சுவிஸ் குடிமக்களின் சராசரி ஆண்டு வருவாய், 88,000 சுவிஸ் ஃப்ராங்குகள். இது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட 4,600 ஃப்ராங்குகள் அதிகம் ஆகும்.
வெளிநாட்டு ஆண்களைவிட சுவிஸ் ஆண்கள் சராசரியாக 18 சதவிகிதம் அதிகம் ஊதியம் பெறுகிறார்கள்.
அதே நேரத்தில், மேலாளர் மட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
உதாரணமாக, B அனுமதி வைத்துள்ளவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 12,791 ஃப்ராங்குகளும், C அனுமதி வைத்துள்ளவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 11,495 ஃப்ராங்குகளும், G அனுமதி வைத்துள்ளவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 10,707 ஃப்ராங்குகளும் ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
இவை எல்லாமே சுவிஸ் நாட்டவர்கள் பெறும் ஊதியத்தைவிட அதிகமாகும். இதே பணியிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் மாதம் ஒன்றிற்கு 10,476 ஃப்ராங்குகள்தான் ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |