ஜேர்மனியின் கட்டுப்பாடுகள் சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு வழிவகுக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
ஜேர்மனியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான புதிய அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆனால், அப்படி சட்டப்படியான புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவது, சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நிபுணர்கள் எச்சரிக்கை
Bonn International Centre for Conflict Studies (BICC) என்னும் அமைப்பைச் சேர்ந்த Benjamin Etzold, Franck Düvell மற்றும் Petra Bendel ஆகியோர், Global Forced Displacement Report என்னும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கை, ஜேர்மனியின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளது. அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான Benjamin Etzold, ஜேர்மனியின் புலம்பெயர்தல் கொள்கை, உலகம் எதிர்கொண்டுள்ள தற்போதைய சவால்களுக்கு ஏற்றதல்ல என்கிறார்.
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸின் புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்பும் திட்டம், எதிர்பார்த்த பலனைத் தராது என்கிறார் அவர்.
திருப்பி அனுப்பப்படும் ஒரு நபர், தான் அந்த நாட்டுக்குள் வந்து சேரும்வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டேதான் இருப்பார் என்கிறார் Etzold.
அத்துடன், முறைப்படி ஒரு நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லையென்றால், சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பார்கள். அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாகிவிடும் என்கிறார் Etzold.
ஜேர்மனியின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானதும்கூட என்று கூறியுள்ளார் அறிக்கை தயாரித்தவர்களில் மற்றொருவரான Petra Bendel.
புகலிடம் கோருதல் என்பது ஜேர்மன் அரசியல் சாசனத்தாலும், அடிப்படை சட்டத்தாலும், ஐரோப்பிய சட்டத்தாலும்கூட பாதுகாக்கப்பட்ட விடயமாகும் என்று கூறும் Petra Bendel, மக்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவதன் மூலம், ஜேர்மனி சட்டத்தை மீறுவதாகவும் தாங்கள் அஞ்சுவதாக தெரிவிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |