புடின் முன் தோழிக்கு Love propose செய்த செய்தியாளர்: கிண்டலடித்து மகிழ்ந்த புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் திருமண வேண்டுகோளை முன்வைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
புடினின் செய்தியாளர் சந்திப்பில் சுவாரஸ்யம்
ஆண்டுதோறும் நடத்தப்படும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்த பரபரப்பான விவாதங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் நடைபெறும் நிலையில், எகடெரின்பர்க்கின்(Yekaterinburg) சேனல் 4 தொலைக்காட்சியை சேர்ந்த கிரில் பாஷனோவ் என்ற செய்தியாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அவர் தன்னுடைய கையில் “தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக” வெளிப்படுத்தும் பதாகையை பிடித்தவாறு தனது விருப்பத்தை தன்னுடைய காதலி ஓல்காவிடம் வெளிப்படுத்தினார்.
புடினுக்கு திருமண அழைப்பு

இந்த சம்பவத்தை கவனித்த புடின், “நீங்கள் இப்போதே திருமண பதிவு அலுவலகத்திற்கு செல்ல தயாராகிவிட்டீர்கள் என்பது போல் தோன்றுகிறது” என கிண்டலடித்தார்.
அப்போது செய்தியாளர் கிரில் பாஷனோவ் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் “எங்கள் திருமணத்திற்கு நீங்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் அது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
4 மணி நேர சந்திப்பின் போது கிரில் பாஷனோவ்-வின் காதலி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது தொடர்பான செய்தி அறிந்து கொண்ட புடின், திருமணத்திற்கான பணத்தை இப்போதே வசூலிக்க தொடங்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |