கொரோனா தடுப்பூசி போட்ட இளைஞர்களுக்கு இதயத்தில் பாதிப்பு! வெளியான திடுக்கிடும் தகவல்
கொரோனா தடுப்பூசி போட்ட சில இளைஞர்களுக்கு இதய தசை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து மேலும் விசாரணை நடத்த அமெரிக்க ஆலோசனைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
மிகவும் அரிதான இதய தசை வீக்கம் பற்றி மேலும் ஆய்வு செய்ய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது.
தடுப்பூசி போட்ட குறிப்பாக ஆண், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு myocarditis என்னும் இதய தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான அறிக்கையை CDC-யின் நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்த வீக்கம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சரியாகிவிடும், இது பலவிதமான வைரஸ்களால் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
mRNA தடுப்பூசிகளை போட்ட நான்கு நாட்களுக்குள் இந்த அரிதான பாதிப்பு ஏற்பட்டதாக CDC தெரிவித்துள்ளது.
ஆனால், எந்த தடுப்பூசிகள் என்று CDC குறிப்பிடவில்லை. மாடர்னா மற்றும் Pfizer ஆகிய இரண்டு mRNA தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா அவசர பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகள் myocarditis ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது, மேலும் இது தடுப்பூசிக்கு காரணமா என்று கண்காணிக்க வேண்டியது அவசியம் என சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் மூத்த அறிஞர் டாக்டர் அமேஷ் அடல்ஜா கூறினார்.