மரியூபோலிலிருந்து ரஷ்யாவால் பிடித்துச்செல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கதி குறித்து வெளியாகியுள்ள பயங்கர தகவல்கள்
உக்ரைனிலுள்ள மரியூபோலிலுள்ள உருக்காலை ஒன்றின் நீண்ட நாட்களாக பதுங்கியிருந்து தங்கள் நாட்டுக்காக போராடி வந்தார்கள் உக்ரைன் வீரர்கள்.
அப்போது அவர்கள் உணவு, தண்ணீர் பற்றாக்குறை போல சிற்சில பிரச்சினைகளை சந்தித்தாலும், கௌரவத்துடன் இருந்தார்கள்.
ஆனால், அவர்களை விடுவிப்பதாகக் கூறி ஒரு ஆபரேஷன் நடத்தப்பட்டபோது, பிரச்சினைக்கெல்லாம் விடிவு வந்தது போலத்தான் இருந்தது.
ஆனால், அவர்கள் அந்த சுரங்கத்துக்குள் இருந்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பார்கள் போலும் என எண்ணும் அளவுக்கு தற்போது அவர்களைக் குறித்த பயங்கர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், ரஷ்யாவால் மரியூபோலிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள், கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை அடித்து நொறுக்கி, நகங்களை பிடுங்கி, மின்சார ஷாக் கொடுத்து, கழுத்தை நெறித்து கொடுமைப்படுத்திவருகிறார்களாம் ரஷ்யர்கள்.
அத்துடன், ஏதேதோ போதைப்பொருட்களை அவர்கள் உடலில் செலுத்தி, அவமானப்படுத்துவதுடன், ரஷ்ய தேசிய கீதத்தைப் பாடவைத்தும், தங்களை மன்னிக்குமாறு கெஞ்ச வைத்தும் அதை பதிவு செய்தும் வருகிறார்களாம் ரஷ்யர்கள்.
இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். பழங்காலத்தில் போர்க்கைதிகளை இப்படியெல்லாம் சித்திரவதை செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கிடையில், உலகம் முன்னேறி விட்டது, நாகரீகம் வளர்ந்து விட்டது என்கிறோம். ஆனால், இந்த காட்டுமிராண்டித்தனங்கள் கொஞ்சமும் மாறவில்லையே!