ஜேர்மனியில் ஜேர்மானியர்கள் அல்லாத குற்றவாளிகள் எத்தனை பேர்? ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் அல்லது குற்றவாளிகள் என சந்தேகத்துக்குரியவர்களில் ஜேர்மானியர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள்
உண்மையில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில், 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை ஃபெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளில், ஜேர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் ஜேர்மானியர்கள் அல்லாதவர்கள் 35. 4 சதவிகிதம், அவர்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் முதலான தற்காலிக புலம்பெயர்ந்தோர் 8.8 சதவிகிதம், ஜேர்மானியர்கள் 64.6 சதவிகிதம் என தெரியவந்துள்ளது.
2024 நிலவரப்படி, 1.967 மில்லியன் குற்றவாளிகளில், 172,203 பேர் தற்காலிக புலம்பெயர்ந்தோர் ஆவர்.
ஜேர்மனியின் மக்கள்தொகை சுமார் 83.6 மில்லியன். அதில் 3.06 மில்லியன் பேர் தற்காலிக புலம்பெயர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |