தேர்தல் முடிவுகள் எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய வலுத்துவரும் கோரிக்கைகள்
பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில் ஆளும் லேபர் கட்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்யவேண்டும் எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
தேர்தல் முடிவுகள் எதிரொலி
பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில், குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், லேபர் கட்சி 25 கவுன்சிகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான கவுன்சிலர்களையும் பறிகொடுத்துள்ளது.

ஆகவே, தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என கோரியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |