இன்னும் 6 அடி தூரம் மட்டுமே! அதிகரிக்கும் பதற்றம்.. 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் தற்போதைய நிலை?
மொராக்கோவில் 100 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் விழுந்தது தெரியவந்ததும், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
Rayanக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது, அவனது நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சிறுவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
? متر واحد و80 سنتمترا يفصل فريق الإنقاذ عن المكان الذي يتواجد به #الطفل_ريان حسب اخر معلومة وافانا بها موفدنا فؤاد عزوزي. العملية مستمرة.
— 2M.ma (@2MInteractive) February 5, 2022
---
?Encore 1.8 mètre à creuser avant d'atteindre l'endroit du puits asséché où le petit #Rayan se trouve (journaliste 2M sur place) pic.twitter.com/xn6Liw6vLz
தற்போதைய நிலையில், இன்னும் 6 அடி தூரம் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும் எந்நேரமும் நிலச்சரிவும் ஏற்படலாம் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள Abdelhadi Temrani என்பவர், Rayan எந்த நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் எங்களுக்கு பாரிய நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர்கள் தயாரான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.