ஜேர்மனியில் குற்றச்செயல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர்தான் இருக்கிறார்களா? ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில் குற்றச்செயல்களின் பின்னணியில் உண்மையாகவே புலம்பெயர்ந்தோர்தான் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவுகள், புதியதொரு தகவலைத் தந்துள்ளன!
குற்றச்செயல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர்?
ஜேர்மன் ஊடகங்கள் புலம்பெயர்ந்தோர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
ஜேர்மனியில் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடுவதே புலம்பெயர்ந்தோர் அல்லது வெளிநாட்டவர்கள்தான் என்னும் ஒரு தோற்றத்தை ஊடகங்கள் முன்வைக்கின்றன.
ஆனால், அது உண்மையா? ஜேர்மனியில் குற்றச்செயல்களின் பின்னணியில் உண்மையாகவே புலம்பெயர்ந்தோர்தான் அதிகம் இருக்கிறார்களா?
இந்த விடயத்திலுள்ள உண்மை நிலையைக் கண்டறிவதற்காக, ஊடகவியல் பேராசிரியரான தாமஸ் (Thomas Hestermann) என்பவர் தலைமையில், ஹாம்பர்கிலுள்ள Macromedia University of Applied Sciences என்னும் பல்கலையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைத் தெரிவித்துள்ளன. ஆம், புலம்பெயர்ந்தோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ள சம்பவங்களை விட, மூன்று மடக்கு அதிகமாக, ஜேர்மனியில் குற்றச்செயல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர் இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆக, ஜேர்மன் ஊடகங்கள் பாரபட்சமாக செய்திகள் வெளியிடுகின்றன. அதனால், புலம்பெயர்ந்தோர் குறித்த பொதுமக்களுடைய பார்வையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
உதாரணமாக, 2025ஆம் ஆண்டு, மியூனிக் நகரில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஆப்கன் நாட்டவரான இளைஞர் ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தினார். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள்.
சில நாட்களுக்குப் பின், Mannheim நகரில் ஜேர்மானியர் ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தினார். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள்.
ஆனால், ஊடகங்கள் என்ன செய்தன? ஜேர்மன் அரசு ஊடகமான ARD, மியூனிக் தாக்குதல் குறித்து தனது prime-time செய்தியில் பெரிய அளவில் அறிவிப்பு செய்தது. ஆனால், Mannheim தாக்குதல் குறித்து ARD செய்தி வெளியிடவே இல்லை என்கிறார் தாமஸ்.
ஆக, தாமஸின் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஜேர்மன் ஊடகங்கள் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் மீது இருமடங்கு கவனம் செலுத்துவது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |