பேய்கள் அதிகம் உலாவும் பிரித்தானிய நகரம்! திகில் ஆய்வு முடிவு
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் 31 சதவீதத்தினர் பேயை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
பேய்களை பார்த்த மக்கள்
அமானுஷ்ய கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதிலும் முக்கியமாக பேய்கள் குறித்த கதைகள் தான் எங்கும் ஆக்கிரமித்திருக்கும்.
அந்த வகையில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கு வசிக்கும் 31 சதவீத மக்கள் பேயை பார்த்தாக ஆய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.
Getty Images
அவர்களில் கிரேக் என்ற 43 வயது நபர், தனது 18 வயதில் படுக்கையறையில் இருந்தபோது, கையில் கூடையுடன் மனித உருவில் ஒன்று தன் அறையை கடந்து சென்றதாகவும், அப்போது பயத்தில் உறைந்து போனதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஆய்வில் இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் எடின்பர்க் நகரம் பிடித்துள்ளது. 25 சதவீத மக்கள் இங்கு பேயை பார்த்ததாக கூறும் நிலையில், நாட்டிங்காம், லிவர்பூல் மற்றும் நியூ காஸ்டில் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பிரிஸ்டோல் நகரில் குறைவான மக்கள் பேயை பார்த்ததாக இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
நிபுணரின் கூற்று
அமானுஷ்ய விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற ராப் பைக் என்பவர் கூறுகையில், 'கிட்டத்தட்ட நாம் அனைவருமே பேய்களோடுதான் வாழ்ந்து வருகிறோம். இந்த பெய்க்ள் யார் என்று நினைக்கிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருப்பவர்களும், உங்கள் உறவினர்களும் தான் பேய்களாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். 90 சதவீதத்தினருக்கும் மேலான மக்கள் தங்கள் வீட்டில் ஆவிகள் உலாவுவதை நேரில் பார்த்துள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
ANDREIUC88/SHUTTERSTOCK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |