ஸ்பெயினில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
ஸ்பெயினின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
பார்சிலோனா அருகே மான்லியூ நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு மிகப்பெரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் சேமிப்பு கிடங்கில் முதலில் தீ பரவியதாக அவசர கால மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் முழுவதும் தீ வேகமாக பரவியதால் மேல் தளத்தில் இருந்த இளைஞர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி கொண்டனர்.

இந்த விபத்தில் 5 இளைஞர்கள் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் அதில் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, உயிரிழந்த 5 பேரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, அதே சமயம் தீ எவ்வாறு கட்டிடம் முழுவதும் பரவியது என்பது குறித்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |