ஜேர்மனியில் விலைவாசி உயர்வால் வீடுகள் கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை
ஜேர்மனியில், விலைவாசி உயர்வால், கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
வீடுகள் கட்டுவதில் பிரச்சினை
83.5 மில்லியன் மக்கள்தொகையும், சுமார் 8.2 மில்லியன் குடும்பங்களும் கொண்ட நாடு ஜேர்மனி.
மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மக்கள் வாழ்வதற்கான வீடுகள் எண்ணிக்கையும் அதிகரித்தால்தானே மக்கள் வாழ வீடுகள் கிடைக்கும்?

ஆனால், விலைவாசி உயர்வு காரணமாக, ஜேர்மனியில் வீடுகள் கட்டப்படுவது குறைந்துகொண்டே வருகிறது.2025ஆம் ஆண்டில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவில், கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கை குறைவாக அமைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலின்படி, மக்கள் வாழ்வதற்கான வீடுகள் எண்ணிக்கை 18 சதவிகிதம் குறைந்துள்ளது.
2012க்குப் பிறகு கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்துள்ளது 2025இல்தான்.
கட்டுமானப்பணி என்பது மிகவும் சிக்கலானதும், மிகவும் செலவு பிடிக்கக்கூடியதும், பல்வேறு விதிகளுக்குட்பட்டதும் ஆகும், அதைச் செய்து முடிக்க நீண்ட காலம் ஆகும் என்கிறார் துறைசார் நிபுணரான Ludwig Dorffmeister என்பவர்.
விடயம் என்னவென்றால், இந்த ஆண்டில் கட்டப்பட இருக்கும் வீடுகள் எண்ணிக்கை மேலும் குறைந்து 185,000 ஆக உள்ளது என்கிறார் அவர்.
ஆக, விதிகளைத் தளர்த்தி, வீடுகள் கட்ட உதவியும் செய்யவேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |