பிரித்தானியாவில் வீடொன்றில் குண்டு வெடிப்பு: மக்கள் வெளியேற்றம்
Residents evacuated after pipe bomb explosion at Belfast home: வட அயர்லாந்தில் வீடொன்றில் குண்டு ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வட அயர்லாந்தில் வீடொன்றில் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடொன்றில் குண்டு வெடிப்பு
வட அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்ட் நகரில், இன்று காலை, வீடொன்றில் குண்டு ஒன்று வெடித்தது.

அது ஒரு பைப் வெடிகுண்டு என தெரியவந்துள்ள நிலையில், தங்கள் வீட்டுக்கு அருகே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றியுள்ள வீடுகளிலிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.