இலங்கையை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுங்கள்! கொந்தளித்த சங்கக்காரா மனைவி
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார, அரசாங்கத் தலைவர்களை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு ‘காலி முகத்திடல்’ போராட்ட தளத்தில் உரையாற்றிய யெஹாலி, நாட்டை மேலும் அழிக்காமல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.
உக்ரைனுக்காக ரஷ்யர்களுடன் சண்டையிடும் ஜார்ஜியர்கள்! வீடியோ ஆதாரம்
தேசிய நெருக்கடிக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை என்று கூறிய அவர், மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறினார்.
ஐபிஎல் தொடருக்கான தற்போது இந்தியாவில் இருக்கும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா, இலங்கையில் நடைபெறும் பொதுப் போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.