மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
மநீம பொதுக்கூட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் சினேகன், நடிகை ஸ்ரீபிரியா, சிறப்பு அழைப்பாளர்கள் என்று மொத்தம் 2750 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
1. நடிகர் கமல் ஹாசனை மீண்டும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவராக வாய்மொழியாக தெரிவு செய்து தீர்மானம்.
2. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
3. வருகின்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும்
4. மக்கள் நீதி மய்ய கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டி தீர்மானம்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டம் முடிந்த பிறகு கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |