விஜயகாந்த் எங்கே? நள்ளிரவில் வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுக்கும் நபர்களால் பரபரப்பு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு வந்து சில நபர்கள் தொல்லை கொடுப்பதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ம் திகதி மறைந்தார். அவரது உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோயில் போன்ற தோற்றத்தில் உருவாக்கி கேப்டன் கோவில் என்று கட்சியினர் அழைத்து வருகின்றனர்.
மேலும், விஜயகாந்த் மரணமடைந்த நாளில் இருந்து இன்று வரை யார் அவர் நினைவிடத்திற்கு வந்தாலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பொலிஸில் புகார்
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டிற்கு வந்து கூச்சலிடுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் தேமுதிக விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது, விஜயகாந்த் எங்கே என்று மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொந்தரவு தருவதாகவும், அதனால் வீட்டில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |