பிறந்தநாள் லொட்டரியில் கொட்டிய பணமழை: ஓய்வு பெற்ற சென்னை பொறியாளருக்கு இன்ப அதிர்ச்சி!
பிறந்தநாள் லொட்டரியால் ஓய்வு பெற்ற சென்னை பொறியாளரின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது.
லொட்டரியால் கொட்டிய அதிர்ஷ்டம்
சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலனுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
அதாவது மார்ச் 16 அன்று தனது பிறந்தநாளில் அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் ஜாக்பாட் அடித்தது.
கண்களை மூடிக்கொண்டு, தனது செல்போனில் யதார்த்தமாக ஒரு எண்ணைத் தொட்டே ராஜகோபாலனுக்கு இந்த லொட்டரி விழுந்துள்ளது என்பது மேலும் வியப்பளிக்கிறது.
"முதலில் என்னால் நம்பவே முடியவில்லை," என்று ராஜகோபாலன் நினைவு கூர்ந்தார். "நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், மேலும் வெற்றி பெற்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன்.
இவ்வளவு பெரிய தொகை கிடைத்தபோது பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. " தனது மனநிலையை அவர் "70 சதவீதம் மகிழ்ச்சி, 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு நான் இதுபோன்ற எதையும் சமாளித்ததில்லை," என்று விவரித்தார்.
கிடைத்த தகவல்படி அவருக்கு கிட்டத்தட்ட ரூ.230 கோடி லொட்டரி பரிசாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |