ஊழல் செய்து சொத்து குவித்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி .., 2.7 கிலோ தங்கம், 17 டன் தேன் பறிமுதல்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 2.7 கிலோ தங்கம், 17 டன் தேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெருமளவில் ஊழல்
இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசம், பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக பயணியாற்றிய கோவிந்த் பிரசாத் மெஹ்ரா என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து அவர் போபாலில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே பணியில் இருக்கும்போது ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்துக் குவித்திருப்பதாக மெஹ்ரா மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின்படி நேற்று முன்தினம் போபால் மற்றும் நர்மதாபுரம் பகுதிகளில் மெஹ்ராவுக்கு சொந்தமான 4 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2.7 கிலோ தங்க நகைகள், 5.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சைனி கிராமத்தில் 32 சுற்றுலா வீடு கட்டப்பட்டு வரும் நிலையில் பிவிசி பைப் தயாரிக்கும் ஆலை, பல்வேறு பண்ணை வீடு ஆகியவை குடும்பத்தினர் பெயரில் இருக்கிறதாம்.
மேலும், பண்ணை வீட்டில் இருந்து 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். இதனையடுத்து, மெஹ்ராவின் 2 மகன்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர் பொலிஸார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |