இளைஞர்களின் பைக் ரேஸ் மோகத்தால் பறிபோன பெண்ணின் உயிர்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆறு இளைஞர்கள் 3 ரேஸ் பைக்களில் வந்துள்ளனர். அப்போது சாலையின் ஓரமாக 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பயணித்துள்ளார்.
குறித்த இளைஞர்கள் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டபோது, ஒரு பைக் அப்பெண்ணின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
பெண் உயிரிழந்ததை அறிந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் பயணித்த இளைஞரை கைது செய்தனர்.
பலியான பெண் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என்பது பின்னர் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய மற்ற இளைஞர்களை தேடி வருகின்றனர்.