சிரியா மக்கள் தாயகம் திரும்புவதால் ஜேர்மனியில் எழுந்த புதிய நெருக்கடி
வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள சிரியா மக்கள் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஜேர்மனியில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1 மில்லியன் சிரிய அகதிகள்
சிரிய அகதிகள் தாயகம் திரும்பினால், ஜேர்மன் மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜேர்மனியில் சுகாதாரத்துறையில் மட்டும் மருத்துவர்களாக 5,000க்கும் மேற்பட்ட சிரிய மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணியாற்றுவதால், பதிலுக்கு அப்பகுதிகளில் மருத்துவர்களையும் ஊழியர்களையும் நியமிப்பது சிக்கலை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நிலையில் இருக்கும் ஜேர்மனி, சுமார் 1 மில்லியன் சிரிய அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் உள்ளூர் அரசியல் கட்சிகளை இது அதிருப்தியடையவும் செய்துள்ளது.
தற்போது அசாத் அரசாங்கம் நீக்கப்பட்டுள்ள நிலையில், சிரிய மக்கள் தாயகம் திருபட்டும் என்ற கோரிக்கை ஜேர்மனியில் சில அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படியான சூழல் உருவானால், ஜேர்மனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என பல நிறுவனங்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை கொண்ட பல நிறுவனங்களில் தற்போதைய சூழலில், சிரிய மக்களும் வெளியேற்றப்பட்டால், கடுமையான நெருக்கடி ஏற்படும் என்றே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் ஜேர்மனியில் 287,000 சிரிய மக்கள் வேலை செய்கிறார்கள். மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளில் வந்த பலர் இன்னும் மொழி மற்றும் ஒருங்கிணைப்பு படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பணியாளர் மட்டங்களில்
சிரிய ஆண்கள் பெரும்பாலும் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், உற்பத்தி, உணவு மற்றும் விருந்தோம்பல், சுகாதாரம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். சமூக மற்றும் கலாச்சார சேவைகளில் பெண்கள் பணியாற்றுகின்றனர்.
ஜேர்மன் மருத்துவ சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 5,758 சிரிய மருத்துவர்கள் ஜேர்மனியில் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறார்கள் மற்றும் அங்கு அவசரமாக தேவைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜேர்மனியை விட்டு வெளியேறினால், இது சந்தேகத்திற்கு இடமின்றி பணியாளர் மட்டங்களில் உணரப்படும் என்றும் நிபுணர்கள் பலர் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மட்டுமின்றி, காப்பகங்களில் சிரிய மக்கள் பணியாற்றி வருவதால், அவர்கள் தாயகம் திரும்ப நேர்ந்தால், அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |