16 வயது நபர் தொடர்பில் 10,000 டொலர் வெகுமதி அறிவித்த பொலிசார்: பகீர் பின்னணி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி என கருதப்படும் 16 வயது இளைஞர் தொடர்பில் பொலிசார் வெகுமதி அறிவித்துள்ளனர்.
மொத்தம் $10,000 வெகுமதி
புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 16 வயதான தாஜ் ப்ரூடன்(Tahj Brewton) கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு அதிகாரிகள் மொத்தம் $10,000 வெகுமதி அறிவித்துள்ளனர்.
Marion County Sheriff
மூன்று இளைஞர்கள் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்படும் மூன்றாவது சந்தேக நபர் இந்த தாஜ் ப்ரூடன். மார்ச் மாத இறுதியில் மத்திய புளோரிடாவில் உள்ள மரியன் கவுண்டியில் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மார்ச் 30 அன்று ஃபாரஸ்ட் லேக்ஸ் பார்க் பகுதியில் சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 16 வயதுடைய லைலா சில்வர்நெயில் பலியானவர்களில் ஒருவர் என பொலிசார் அடையாளம் கண்டனர்.
மறுநாள் காலை சாலை ஓரத்தில் 17 வயது ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மூன்றாவதாக பெண் ஒருவர் சில்வர்நெயில் என்பவரின் காரின் டிக்கியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கிரிமினல் குழு ஒன்றுடன் தொடர்பு
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களும் சந்தேக நபர்களும் கிரிமினல் குழு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்று நம்புவதாக பொலிசார் கூறியுள்ளனர். இதில் ராபர்ட் ராபின்சன்(17) மற்றும் கிறிஸ்டோபர்(12) ஆகிய இருவரும் பொலிசார் வசம் சிக்கியதுடன், இருவரும் காவலில் உள்ளனர்.
இருவரும் மீதும் முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது ப்ரூடன் தலைமறைவாக உள்ளதால், பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
@chrisbott
16 வயதான ப்ரூடன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ப்ரூடன் ஆயுததாரியாகவும் ஆபத்தானவராகவும் பொலிசார் கருதுவதால், பொதுமக்கள் நெருங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.