தள்ளுவண்டியில் வீதி வீதியாக ஐஸ்க்ரீம் விற்ற தமிழர் இன்று பெரும் கோடீஸ்வரர்! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஐஸ் க்ரீம்!! இந்த பெயரை கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு இந்த குளர்ச்சி பொருளை விரும்புகிறவர்கள் அதிகம்.
இந்த ஐஸ் க்ரீம் மூலம் தமிழர் ஒருவர் பெரும் சாம்ராஜ்யமே அமைத்துள்ளார்.
ஆம் அவர் தான் ஆர்.ஜி சந்திரமோகன்! 10 பைசா குச்சி ஐஸ் தொடங்கி கோடிகளில் வியாபாரம் பார்த்து வருகிறார். சந்திரமோகனின் சொத்து மதிப்பு கடந்த மே மாத கணக்கின்படி $1.9 பில்லியன் ஆகும்.
தமிழகத்தை சேர்ந்த சந்திரமோகன் பள்ளி மாணவராக இருந்த போது ஐஸ்க்ரீமுக்காக என்று தவறாமல் பணத்தை ஒதுக்கி வைப்பார். பின்னாளில் இதே துறையில் ஒரு பெரும் ராஜ்ஜியம் அமைப்போம் என அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார்.
தொடக்கக் காலத்தில், நான் தினமும் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் பயணம் செய்யும்போதெல்லாம் போட்டியாளர்களான இதர பிரபலத் தயாரிப்பு நிறுவனங்களின் சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ள வெளி நிறுவன ஐஸ்க்ரீம்களையும் முயற்சித்துப் பார்க்கிறேன் - சந்திர மோகன்
கடந்த 1970களில் தனது 21 வயதில் அருண் ஐஸ்க்ரீமைத் தொடங்கினார் சந்திர மோகன்.
3 அல்லது 4 பேர் வேலை செய்து ஒரு நாளுக்கு 20 லிட்டர் ஐஸ்க்ரீமை மனித உழைப்பில் கைமுறையாகத் தயாரித்தனர்.
10 பைசா குச்சி ஐஸ்தான் அவர்களுடைய முதல் ஐஸ்க்ரீம் வகையாகும். அது தள்ளுவண்டியில் வீதிகளில் கொண்டு சென்று விற்கப்பட்டது.
இப்போது ஒரு தானியங்கி சாதனம் ஒரு நாளுக்கு 50,000 லிட்டர் முதல் 75,000 லிட்டர் வரை ஐஸ்க்ரீமை தயாரிக்கிறது. ஐஸ் க்ரீம் துறையில் ஏற்கனவே முன்னணியில் இருந்த தாசபிரகாஷ், ஜாய் மற்றும் க்வாலிட்டி ஆகியவைகளை சமாளிக்க அருண் ஐஸ்க்ரீம் மிகவும் சிரமப்பட்டது.
பின்னாளில் அருண் ஐஸ் க்ரீம் வியாபாரத்தில் உச்சம் தொட்டது அனைவரும் அறிந்த விடயம்.