ஜேர்மன் எல்லையில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம்
Rheinfelden border crossing to Switzerland closed, police checking car for explosives: சுவிஸ் ஜேர்மன் எல்லையில், வாகனம் ஒன்று வெடிபொருட்களுடன் செல்வதாக சந்தேகம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.

நேற்று மதியம் 1.00 மணியளவில், Rheinfelden என்னுமிடத்தில் அமைந்துள்ள சுவிஸ் ஜேர்மன் எல்லையில், ஜேர்மன் கார் ஒன்றை மோப்ப நாய்கள் சுற்றிவளைத்ததால் பொலிசார் பரபரப்படைந்தனர்.
பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம்
உடனடியாக அங்கு பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டு, இரு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரில் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என்னும் ஆய்வில் இறங்க, காரிலிருந்த இருவரைக் கைது செய்த பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் ஜேர்மானியர்கள். நீண்ட நேர ஆய்வு, விசாரணைக்குப் பின், அந்தக் காரில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இரவு 8.00 மணியளவில் எல்லை திறக்கப்படலாம் என அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.
இரு நாடுகள் தொடர்புடைய ஒரு இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாலும், நீண்ட பேரம் இருபக்கமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |