258 பந்துகளில் 249 ஓட்டங்கள் குவித்த 23 வயது வீரர்
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் ரைஸ் மரியு இரட்டை சதம் விளாசினார்.
டேல் பிலிப்ஸ் 103 ஓட்டங்கள்
நியூசிலாந்து ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.
Rhys Mariu 200* on day one of NZ-A vs SA-A pic.twitter.com/a3LEWqkAVD
— The Niche Cache (@thenichecache) September 7, 2025
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ஏ முதலில் துடுப்பாட்டத்தை துவங்கியது.
தொடக்க வீரர் டேல் பிலிப்ஸ் 103 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரும் ரைஸ் மரியுவும் 230 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ரைஸ் மரியு இரட்டைசதம்
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ரைஸ் மரியு (Rhys Mariu) இரட்டைசதம் அடித்தார். அதன் பின்னரும் பவுண்டரிகளை விரட்டி விரைவாக ஓட்டங்களை சேர்த்தார்.
அவர் 258 பந்துகளில் 2 சிக்ஸர், 35 பவுண்டரிகளுடன் 249 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
23 வயது வீரரான ரைஸ் மரியு, இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |