அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால்.. நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்த முடிவு
வர்த்தகர்கள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் 1977-க்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
அரிசியின் விலை
அரிசியின் விலையை நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதாவது வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.220 ஆகவும், கீரி சம்பா கிலோவுக்கு ரூ.260 ஆகவும், சம்பா கிலோவுக்கு ரூ.260 ஆகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி கிலோவுக்கு ரூ.210 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலையை விட அதிகமான விலையை வைத்து அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடுவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அபராதம்
இந்த கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலை வைத்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்ததாகவும், அவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல வர்த்தகர்கள் அரிசி விலையை அதிகமாக வைத்து விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |