சார்லஸ் மன்னரை விடவும் பெரும் பணக்காரரான பிரதமர் ரிஷி சுனக்... வெளியான பிரித்தானியப் பட்டியல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் தனிப்பட்ட சொத்துமதிப்பு என்பது கடந்த ஓராண்டில் 120 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சார்லஸ் மன்னரைவிடவும் அதிகம்
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா தம்பதியின் மொத்த சொத்துமதிப்பு தற்போது 651 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இது 529 மில்லியன் பவுண்டுகள் என இருந்துள்ளது.
மட்டுமின்றி, ரிஷி மற்றும் அக்ஷதா தம்பதியின் சொத்து மதிப்பானது சார்லஸ் மன்னரைவிடவும் அதிகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சார்லஸ் மன்னரை விடவும் ரிஷி சுனக் பெரும் பணக்காரர் என்றே கூறப்படுகிறது.
சார்லஸ் மன்னரின் தற்போதைய சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகள் என இருந்துள்ளது. ஒட்டு மொத்த பிரித்தானிய பெரும் பணக்காரர்களில் 258வது இடத்தில் உள்ளார் சார்லஸ் மன்னர்.
மேலும், பிரித்தானிய இசைக்கலைஞர்களில் முதல் முறையாக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் Sir Paul McCartney இணைந்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு சுமார் 50 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 165வது இடத்தில் உள்ளார் முன்னாள் Beatles இசைக்கலைஞர் Sir Paul McCartney. பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி தொழிலதிபர் Gopi Hinduja மற்றும் அவரது குடும்பத்தினர்.
இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 37.2 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. 2023ல் 35 பில்லியன் பவுண்டுகள் என இருந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த Sir Jim Ratcliffe தற்போது 4வது இடத்திற்கு சரிவடைந்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு 23.5 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் 29.25 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் உக்ரைன் வம்சாவளி Sir Leonard Blavatnik உள்ளார்.
பெரும் கோடீஸ்வரர்களாக 350 பேர்கள்
மூன்றாவது இடத்தில் 24.98 பில்லியன் சொத்துக்களுடன் David மற்றும் Simon Reuben ஆகியோரின் குடும்பத்தினர் உள்ளனர். 5வது இடத்தில் 20.8 பில்லியன் சொத்துக்களுடன் Dyson நிறுவனத்தின் உரிமையாளரான Sir James Dyson மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
6வது இடத்தில் 17.2 பில்லியன் பவுண்டுகளுடன் Swire குழுமத்தின் Barnaby மற்றும் Merlin Swire குடும்பத்தினர் உள்ளனர்.7வது இடத்தில் 14.96 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் இஸ்ரேலிய வம்சாவளி Idan Ofer உள்ளார்.
8வது இடத்தில் 14.92 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் இந்திய வம்சாவளி லட்சுமி மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். 9வது இடத்தில் 14.49 பில்லியன் பவுண்டுகளுடன் Guy, George, Alannah மற்றும் Galen Weston குடும்பத்தினர் உள்ளனர்.
10வது இடத்தில் 12.87 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் நார்வே வம்சாவளி John Fredriksen மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளர்.
கடந்த 2023ல் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 275 பேர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 350 பேர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |