இங்கிலாந்தின் The Hundred போட்டியில் முத்திரை பதித்த இந்திய வீராங்கனை
The Hundred கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ரிச்சா கோஷ் விக்கெட் கீப்பிங்கில் மிரட்டினார்.
ரிச்சா கோஷ்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த The Hundred மகளிர் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி 91 பந்துகளில் 80 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரியானா மெக்டொனால்ட்-கே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் (Richa Ghosh) இரண்டு ரன்அவுட் மற்றும் ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் செய்து மிரட்டினார்.
பின்னர் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 59 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெய்க் ஸ்கோல்ஃபீல்ட் 22 ஓட்டங்களும், மெக் லென்னிங் 21 ஓட்டங்களும், ஸ்மிரிதி மந்தனா 17 ஓட்டங்களும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 5 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 ஓட்டங்கள் எடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |