ஆசியாவின் இந்த ஒரு நகரம்... வாயைப் பிளக்கவைக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை
ஆசியாவில் அமைந்துள்ள இந்த ஒரு நகரத்தில் மட்டும் குடியிருக்கும் பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் மில்லியனர்களின் எண்ணிக்கை வாயைப் பிளக்கவைக்கும் வகையில் உள்ளது.
பெரும் கோடீஸ்வரர்கள்
ஜப்பான் தலைநகரான டோக்கியோ நாட்டின் பொருளாதார மையமாக இருப்பதுடன், அரசாங்கமும் இங்கிருந்து தான் செயல்படுகிறது. மட்டுமின்றி ஜப்பான் பேரரசரும் டோக்கியோவில் தான் வசித்து வருகிறார்.
2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்த நகரில் மட்டும் 14 பெரும் கோடீஸ்வரர்களும் 290,300 மில்லியனர்களும் வசித்து வருகின்றனர். 2023ல் டோக்கியோ நகரின் மொத்த மக்கள்தொகை 37 மில்லியன் என்றே கூறப்படுகிறது.
இந்த நகரில் Sony, Mitsubishi, Honda மற்றும் Hitachi ஆகிய பெரும் நிறுவனங்களின் தலைமையகவும் அமைந்துள்ளது. ஜப்பானிய பெரும் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள், வெற்றிபெற்ற தொழில்நுட்ப அல்லது நிதி தொழில்முனைவோர் மற்றும் வசதியான குடும்பங்கள் உட்பட இந்த மில்லியனர்களில் பலர் அசாபு, ஹிரூ அல்லது மினாடோ போன்ற சொகுசான பகுதிகளில் வசிக்கின்றனர்.
SoftBank நிறுவனரின் மகன் மற்றும் Uniqlo நிறுவனர் Tadashi Yanai ஆகியோரும் இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். டோக்கியோவின் Shibuya மாவட்டத்தில் அமைந்துள்ள Tadashi Yanai-வின் குடியிருப்பு மட்டும் 59 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
உலகிலேயே அதிக எண்ணிக்கை
மட்டுமின்றி, பல முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் பலர் இப்பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர். Daikanyama பகுதியில் குடியிருப்பு ஒன்றின் விலை சுமார் 3.7 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
Henley and Partners நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையில், உலகின் செல்வசெழிப்பு மிக்க நகரம் என்பது நியூயார்க் என்றே கூறுகின்றனர். நியூயார்க் நகரில் மட்டும் 58 பெரும் கோடீஸ்வரர்கலும் 340,000 மில்லியனர்களும் வசித்து வருகின்றனர்.
லண்டனில் 2000 காலகட்டத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்கள் வசித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. லண்டனில் தற்போது 36 பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் 258,000 மில்லியனர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |