64 ரூபாயுடன் கனடாவில் காலடி வைத்த இந்தியர்., இப்போது 2.2 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதி!
வி.பிரேம் வாட்ஸா (V. Prem Watsa), ஒரு இந்திய வம்சாவளி தொழிலதிபர், இன்று கனடாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
அவருடைய மொத்த சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டொலர் ஆகும்.
ஆனால், 64 ரூபாயுடன் தான் அவர் கனடாவிற்கு வந்தார் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
ஹைதராபாத்தில் பிறந்த பிரேம் வாட்ஸா, தனது சகோதரருடன் சேர்ந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து, வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் MBA பயின்றார்.
தனது கல்வி செலவுகளை சமாளிக்க, வீடுகளுக்கு சென்று மின் சாதனங்கள் விற்று பணம் சம்பாதித்தார்.
அவருடைய தொழில் பயணம் ஒரு investment analyst-ஆக தொடங்கியது.
1985-ஆம் ஆண்டு அவர் Fairfax Financial Holdings என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இது ஒரு சிறிய முதலீட்டு நிறுவனமாகத் துவங்கிய நிலையில், இன்று உலகளவில் பல நாடுகளில் காப்பீட்டு மற்றும் மறுகாப்பீட்டு நிறுவனங்களை கொண்டுள்ளது.
வாரன் பஃபெட்டின் (Warren Buffett) முதலீட்டு முறையால் ஈர்க்கப்பட்ட வாட்ஸா, மிகவும் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காப்பீட்டு நிறுவனங்களை வாங்கி, வளர்ச்சி அடைய செய்தார்.
அவரது நிறுவனமான Fairfax Financial, BlackBerry, GE போன்ற முக்கிய நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்துள்ளது.
வாட்ஸாவின் தாக்கம் வெறும் வணிகம் மட்டுமல்ல, BlackNorth Initiative எனும் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநராக, கனடாவில் இனவெறியை ஒழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறார்.
2024-ஆம் ஆண்டில், Forbes கோடீஸ்வரர்களின் பட்டியலில் 1851-வது இடத்தில் இருக்கும் வாட்ஸாவின் வாழ்க்கைப் பயணம் ஒரு சாதாரண இந்திய புலம்பெயர்ந்தோராக இருந்து உலகளாவிய தொழிலதிபராக உயர்ந்ததற்கான சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவை எவ்வளவு பாரிய வெற்றியை அளிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
V. Prem Watsa, Indian Origin Candian, Richest Indian in Canada