கூகுளின் சுந்தர் பிச்சையை விடவும் பணக்காரர்... ஆண்டுக்கு ரூ.192 கோடி சம்பளம்: இவரது சொத்து மதிப்பு
பஞ்சாப் மாகாணத்தில் ஜலந்தரைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா தற்போது உலகம் முழுவதும் உள்ள பணக்கார இந்திய வணிக நிர்வாகிகளில் ஒருவர்.
உலக வங்கியின் தலைவராக
நியூயார்க் நகரில் குடியிருக்கும் மிகவும் பணக்கார இந்தியர்களில் ஒருவர் அஜய்பால் சிங் பங்கா. மட்டுமின்றி கூகிளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா ஆகியோரை விடவும் பங்கா கோடீஸ்வரர் என்றே கூறப்படுகிறது.
இவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 6,500 கோடி என்றே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் தான் உலக வங்கியின் தலைவராக பங்கா பொறுப்பேற்றார்.
IIM பட்டதாரியான 63 வயது பங்கா, இதற்கு முன்னர் Citigroup, Mastercard, Nestle மற்றும் General Atlantic ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பஜன் பங்காவின் மகன் தான் இந்த அஜய்பால் சிங் பங்கா.
ஆண்டுக்கு ரூ.192 கோடி சம்பளமாக
ஐதராபாத் நகரில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்ற பங்கா, டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற St Stephen's கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
2016ல் இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 2021ல் Mastercard நிறுவனத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.192 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 113,123,489 டொலர் மதிப்பிலான பங்குகளை இவர் Mastercard நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ளார். தற்போது உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பங்காவுக்கு ஆண்டுக்கு 28 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |