கோடீஸ்வர வீராங்கனை... மெஸ்ஸி, ரொனால்டோவின் மொத்த சொத்துக்களைவிட 5 மடங்கு அதிகம்
தர வரிசையில் 5வது இடத்தில் இருக்கும் டென்னிஸ் நட்சத்திரம் ஒருவரின் மொத்த சொத்து மதிப்பானது கால்பந்து உச்ச நட்சத்திரங்களான மெஸ்ஸி, ரொனால்டோவின் மொத்த சொத்த்க்களை விடவும் 5 மடங்கு அதிகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு 5.32 பில்லியன் பவுண்டுகள்
உலக டென்னிஸ் தர வரிசையில் 5வது இடத்தில் உள்ளார் அமெரிக்கரான Jessica Pegula. இவரது தந்தை Terry அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்.
Buffalo Bills என்ற அணி இவர்களுக்கு சொந்தம், அத்துடன் Buffalo Sabres என்ற அணியும் இவர்களுடையது. 2024ல் வெளியான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இவரது சொத்து மதிப்பு என்பது 5.32 பில்லியன் பவுண்டுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
14 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான படகு ஒன்றும், புளோரிடாவில் 2.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் ஒரு குடியிருப்பும் உள்ளது. Jessica Pegula டென்னிஸ் விளையாட்டில் இருந்து இதுவரை 9.4 மில்லியன் பவுண்டுகள் தொகையை சம்பாதித்துள்ளார்.
முதலிடத்தை எட்ட முடியும்
ஆனால் பரம்பரை சொத்தாக அவருக்கு பெருந்தொகை கிடைத்தால் மட்டுமே அவரால் முதலிடத்தை எட்ட முடியும். மேலும், இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கால்பந்து வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு என்பது 1 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறுகின்றனர்.
21 ஆண்டுகளாக கால்பந்து களத்தில் இருக்கும் ரொனால்டோவின் மொத்த சொத்து மதிப்பு என்பது 470 மில்லியன் பவுண்டுகள். ஆனால் மெஸ்ஸியின் சொத்து மதிப்பு 554 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |