142 நாட்கள்... லண்டன் தாயார் மற்றும் சிறுவன் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட புதிய தகவல்
லண்டன் தாயார் மற்றும் அவரது 7 வயது மகன் மாயமாகியுள்ள விவகாரத்தில் பெருநகர பொலிசார் பொதுமக்களுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாயாரையும் மகனையும்
மேற்கு லண்டனில் ரிச்மண்ட் பகுதியை சேர்ந்த 43 வயது கரிமா மஹ்மூத் மற்றும் அவரது மகன் 7 வயதேயான Adam Glanville ஆகியோர் ஜூன் 3ம் திகதியில் இருந்து மாயமாகியுள்ளனர்.

பல மாதங்கள் கடந்தும் தாயாரையும் மகனையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், கரிமா தொடர்பில் புதிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். மேற்கு லண்டனில் ஃபெல்தாம் பகுதியில் அமைந்துள்ள பெட்ஃபோன்ட் சாலைக்கு அருகில் கரிமா காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு உதவ
குடும்ப நீதிமன்ற உத்தரவை கரிமா மீறியதாக கூறும் பொலிசார், அவரையும் ஆதாமையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கரிமா மற்றும் அவரது மகனை சமீப நாட்களில் எவரேனும் எதிர்கொள்ள நேர்ந்தால்,

அல்லது அவர்களுக்கு உதவும் வகையில் வாடகைக்கு அறை அளித்துள்ளதாக இருந்தால் அவர்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரியுள்ளனர். மேலும், கரிமா தனது தோற்றத்தை மாற்றியிருக்கலாம் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        