அகதிகளை பாதுகாக்கத் தவறிய ஜேர்மனி: அமைச்சர்கள் மீது வழக்கு
அகதிகளை பாதுகாக்கத் தவறியதாக ஜேர்மன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அகதிகளை பாதுகாக்கத் தவறிய ஜேர்மனி
ஆப்கன் அகதிகளை பாதுகாக்கத் தவறியதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul மீதும், உள்துறை அமைச்சரான Alexander Dobrindt மீதும், மனித உரிமைகள் அமைப்பான Pro Asyl என்னும் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது தங்கியிருக்கும் அந்த 2,000க்கும் அதிகமான ஆப்கன் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அகதிகள், ஜேர்மனியில் அவர்களுக்கு பாதுகாப்பு நிலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர்.
ஆனால், ஜேர்மனியின் புதிய அரசு அந்த அகதிகளுக்கான மறுகுடியமர்வுத் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதால், அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அவர்களை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கே மீண்டும் அனுப்பத் துவங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் கவலையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |