சீனாவும் அமெரிக்காவும் மல்லுக்கட்ட... அரிய மண் தாதுக்களால் கோடிகளை சம்பாதிக்கும் பெண்
அரிய மண் கனிமங்கள் தொடர்பில் சீனாவும் அமெரிக்காவும் மல்லுக்கட்டிவரும் நிலையில், அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது புத்திசாலித்தனமான முதலீடுகளால் கோடிகளை சம்பாதித்து வருகிறார்.
இரும்புத் தாது
அவுஸ்திரேலியா வணிக உலகில் பரவலாக அறியப்படும் பெயர்களில் ஒன்று Gina Rinehart. இவரே அரிய மண் தாதுக்களில் முதலீடு செய்து, தற்போது பல கோடிகள் வருவாய் ஈட்டுபவர்.

பெரும்பாலான நாடுகள் அரிய மண் தாதுக்களுக்காக சீனாவை நம்பியிருக்க, இவர் சீனாவை தவிர்த்து, பல நாடுகளில் அரிய மண் தாதுக்களில் முதலீடு செய்துள்ளார்.
அதுவும், அரிய மண் தாதுக்கள் தொடர்பான விவாதங்கள் எழும் முன்பே முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார். இரண்டு தசாப்தங்களாக இரும்புத் தாதுவிலிருந்து கணிசமான செல்வத்தை குவித்த பிறகு, ரைன்ஹார்ட்டின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.
சுமார் 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்பில் 4 பொதுத்துறை அரிய மண் தாதுக்கள் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார். இதன் காரணமாகவே உலகின் பத்து கோடீஸ்வர பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
உலக நாடுகள் பல அரிய மண் தாதுக்கள் விநியோகங்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிக்கிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல குறிப்பிட்ட நாடுகள், அரிய மண் தாதுக்களுக்காக தங்கள் நாடுகளில் ஆராய்ந்து வருகின்றன.

பங்குதாரராக
மிம்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரிய மண் தாதுக்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அரிய மண் காந்தங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் நவீன ஆயுதங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.
அரிய மண் தாதுக்கள் சந்தையில் சீனா 70 சதவீத அரிய பூமி கனிமங்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஆதிக்கம் செலுத்துகிறது. அத்துடன் இந்த கனிமங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தங்களில் 90 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த நிலையில் அரிய மண் தாதுக்கள் தொடர்பில் அறிந்துகொண்ட ரைன்ஹார்ட், அமெரிக்காவின் ஒரே ஒரு அரிய மண் தாதுக்கள் நிறுவனமான MP Materials Corp-ல் முதலீடு செய்தார்.
மட்டுமின்றி, அவுஸ்திரேலியாவின் Lynas நிறுவனத்தில் இரண்டாவது மிகப்பெரிய பங்குதாரராக உள்ளார். மேலும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா தவிர்த்து மலேசியா மற்றும் பிரேசில் நாடுகளிலும் அரிய மண் தாதுக்கள் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |