ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர்

Death Rinku Singh
By Karthikraja Feb 27, 2026 06:52 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு

நிலை 4 கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர் | Rinku Singh Father Passed Away Lpg

அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், T20 உலக கிண்ணத்தில் விளையாடி வரும் ரிங்கு சிங், ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் உயிரிழந்துள்ளார். 

அவரது மறைவிற்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டர் விநியோகர்

ரிங்குவின் தந்தை கான்சந்த் சிங், மாதம் ரூ.12,000 சம்பளத்திற்கு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளராகப் பணியாற்றினார். 

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர் | Rinku Singh Father Passed Away Lpg

ரிங்குவும் அவரது குடும்பத்தினரும் சிலிண்டர் நிறுவனத்தால், 2 அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.

தந்தை குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ரிங்கு சிங், "நான் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதற்காக என் தந்தை என்னை பலமுறை அடித்துள்ளார். ஒருமுறை பள்ளியில் நான் விளையாடிய இறுதிப் போட்டியைப் பார்க்க என் தந்தை வந்திருந்தார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றேன்.

அப்போது எனக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைத்தது. அதன் பிறகு அவர் என்னை அடிக்கவில்லை. நான் ஏதோ நல்லது செய்கிறேன் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்" என கூறினார். 

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர் | Rinku Singh Father Passed Away Lpg

இல்லத்தரசியான அவரது தாய், ரிங்கு சிங் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் செல்ல அருகில் உள்ள கடைகளில் கடன் வாங்கியே பணம் கொடுப்பார்.

கடினமான பொருளாதார சூழலிலும், தனது மகனை கிரிக்கெட் வீரர் ஆக்க கான்சந்த் சிங் ஆதரவளித்துள்ளார்.

கடந்த ஆண்டு, கவாசாகி நிஞ்ஜா 400 ஸ்போர்ட்ஸ் பைக்கை ரிங்கு சிங் அவரது தந்தை பரிசளித்தார். 

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர் | Rinku Singh Father Passed Away Lpg

இவருக்கு உத்திரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாடி கட்சி எம்.பியான பிரியா சரோஜ் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ரிங்கு சிங்கின் தந்தை உயிரிழப்பு - சிலிண்டர் விநியோகராக இருந்து மகனை கிரிக்கெட்டர் ஆக்கியவர் | Rinku Singh Father Passed Away Lpg

ஐபிஎல், உலக கிண்ணம் என தொடர் போட்டிகளால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US