ஒலிம்பிக் மைதானத்தில் தீ விபத்து: திரண்ட 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 தீயணைப்பு வீரர்கள்
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டி மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் மைதானத்தில் தீ விபத்து
புகழ்பெற்ற ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் பூங்காவில் உள்ள வெலோட்ரோமில்(Velodrome) சைக்கிள் பந்தய மைதானத்தில் புதன்கிழமை காலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மைதானத்தின் கூரையின் பெரும் பகுதி தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.17 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெரிதும் போராடினார்.
A fire broke out Wednesday morning at Rio de Janeiro's Olympic Park velodrome, prompting a major emergency response from firefighters.
— ABC News (@ABC) April 9, 2026
The blaze was largely confined to the venue’s fabric roof, officials said. No injuries were reported. https://t.co/8M8zDzDJxK pic.twitter.com/LdAiqyqfzy
மைதானத்தின் கூரையை தீ சேதப்படுத்தி இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக விலை உயர்ந்த மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த பந்தய தளத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மைதானம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கின் வெலோட்ரோமில் மைதானம் அதுவரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |